அரேபிய தீபகற்பத்தின் அல்-கொய்தா தலைவரான நாசர் அல்-உஹைஷி பலி

அரேபிய தீபகற்பத்தின் அல்-கொய்தா தலைவரான நாசர் அல்-உஹைஷி பலி

கடந்த வெள்ளியன்று ஏமன் நாட்டில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அக்-கொய்தா இயக்கத்தின் அரேபிய தீபகற்ப தலைவரான நாசர் அல்-உஹைஷி பலியானதாக அல்-கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

உஹைஷி பலியானதை அல்-கொய்தா இயக்கம் இன்று உறுதி செய்துள்ளது. எனினும் இது குறித்து கருத்து தெரிவிக்க பெண்டகன் மறுத்துவிட்டது. அல் கொய்தா இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவராக விளங்கிய உஹைஷி, ஒசாமா பின்லேடனின் தனிச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஒசாமா கொல்லப்பட்ட பின், அந்த அமைப்பின் முக்கிய தலைவர் தற்போது கொல்லப்பட்டுள்ளதாக அல் கொய்தா தம்மிடம் கூறியதாக ஏமன் டைம்ஸ் பெண் செய்தியாளர் அமல்-அல்-யாரிசி தெரிவித்தார்.

உஹைஷியின் தலைக்கு அமெரிக்க அரசு 10 மில்லியன் டாலர் சன்மானம் நிர்ணயம் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.