சென்னையில் டி-20 உலகக்கோப்பை போட்டி நடைபெறாது?

சென்னையில் டி-20 உலகக்கோப்பை போட்டி நடைபெறாது?

அடுத்த வருடம் மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் டி-20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் சென்னைக்குப் போட்டிகளை ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள 3 கேலரிகளும் (ஐ.ஜே.கே) அனுமதி இல்லாமல் கட்டுப்பட்டுள்ளதால் கடந்த 3  வருடங்களாக அந்த 3 கேலரிகளையும் பயன்படுத்தமுடியாமல் போனது. இதுதான் இப்போது சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது.

உலகக்கோப்பைப் போட்டி நடைபெறும்போது காலியான ஸ்டாண்டுகளை அனுமதிக்க முடியாது. சேப்பாக்கம் மைதானத்தில் நிலவும் 3 கேலரிகள் தொடர்பான பிரச்னைகள் தீர்ந்தால் தான் சென்னையில் போட்டி நடத்துவது பற்றி யோசிக்கமுடியும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

பிசிசிஐ, ஐசிசியிடம் வழங்கிய 8 உலகக்கோப்பை கிரிக்கெட் மையங்களின் பட்டியலிலும் சென்னைக்கு இடமில்லை எனத் தெரிகிறது.

சென்னையில் டி-20 உலகக்கோப்பைப் போட்டி நடப்பது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நம்பிக்கையுடன் உள்ளது. ஒக்டோபரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

அதற்குள் 3 கேலரிகள் தொடர்பான பிரச்னை சரிசெய்யப்பட்டு விடும், எனவே டி-20 உலகக்கோப்பைப் போட்டிகளை சென்னையில் நடத்துவதில் சிக்கல் எழாது என்கிற நம்பிக்கையில் உள்ளது.