இம்ரானின் சாதனையினை பின்தள்ளி மிஸ்பாஹ் முன்னிலையில்..

இம்ரானின் சாதனையினை பின்தள்ளி மிஸ்பாஹ் முன்னிலையில்..

பாகிஸ்தான் அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியவர் என்ற சாதனையினையும், பெருமையினையும் மிஸ்பா உல் ஹக் தன்வசப்படுத்தியுள்ளார். முன்னாள் சகலதுறை வீரரும் சகலதுறை வீரருமான இம்ரான் கானின் சாதனையே, அவர் இவ்வாறு முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னர் 48 போட்டிகளில் தலைமை தாங்கியிருந்த மிஸ்பா, நேற்று(30) ஆரம்பித்த, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியிலேயே, தனது 49ஆவது போட்டியில் தலைமை தாங்கி, இச்சாதனையைப் படைத்தார்.

இம்ரான் கானின் சாதனையை முறியடித்தமை மட்டுமன்றி, 49 போட்டிகளில் தலைமை தாங்கிய சௌரவ் கங்குலியையும், அவர் சமப்படுத்தினார். இருவரும், அதிக போட்டிகளில் தலைமை தாங்கிய அணித்தலைவர்களின் பட்டியலில், 16ஆவது இடத்தில் உள்ளனர்.

அதிக போட்டிகளில் தலைமை தாங்கியவராக, தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் கிறேம் ஸ்மித் காணப்படுகிறார். அவர், 109 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார். தற்போதுள்ள தலைவர்களில், 54 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள அலஸ்டெயர் குக்கே, முன்னணியில் காணப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.