இருதய நோயாளர்கள் உயிரிழப்பு – அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை தடை செய்ய உத்தரவு..

இருதய நோயாளர்கள் உயிரிழப்பு – அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை தடை செய்ய உத்தரவு..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவைச் சிகிச்சையின்போது ஏற்றப்பட்ட ஊசி காரணமாக நால்வர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை ஏற்றுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(29) இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இந்த சாய வகை ஊசி மருந்து தொடர்பில், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த இந்த சாய வகை ஊசிமருந்து,  தேசிய வட கொழும்பு, வைத்தியசாலை,  யாழ்ப்பாணம், கராப்பிட்டிய, பதுளை, களுத்துறை, குருநாகல் ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.