நல்லிணக்கத்திற்குப் பதிலாக குழப்பமான நாடாக இலங்கை – விமல்

நல்லிணக்கத்திற்குப் பதிலாக குழப்பமான நாடாக இலங்கை – விமல்

100 நாட்களுக்குள் புதிய நாட்டிற்கு பதிலாக குழப்பமான சூழலுள்ள  நாடு உருவாகியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டிய அபயராமையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிலருக்கு முன்னாள் ஜனாதிபதி தற்போது வரையில் அறுச்சுறுத்தலாக உள்ளார் என விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை; குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணி ஒன்றில் போட்டியிட தான் ஆயத்தம் எனவும் தெரிவித்துள்ளார்.