பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…

பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களை சேர்ந்த அரச பணியாளர்களும் இன்று(30) பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக சேவை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க திவுலப்பிட்டிய பிரதேச செயலாளரை தூற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்குறித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து நாடுதலுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ரஞ்சித் ஆரியரத்ன எச்சரித்துள்ளார்.

இதேவேளை, திவுலப்பிட்டடிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மண் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்படும் பட்சத்தில் பிரதேச செயலாளரிடம் தான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக பிரதி ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவிததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.