வில்பத்து தேசிய வனப்பூங்காவில் எவ்வித காடழிப்பும் இல்லை – திலக் காரியவசம்

வில்பத்து தேசிய வனப்பூங்காவில் எவ்வித காடழிப்பும் இல்லை – திலக் காரியவசம்

வில்பத்து தேசிய வனப்பூங்கா காடழிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சில சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியது வெறும் ஊடகக் காட்சி என இலங்கை இயற்கைக் கூட்டுத்தாபன செயலாளர் திலக் காரியவசம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திலக் காரியவசம் அவர்கள் வில்பத்து தேசிய வனப்பூங்காவின் அருகில் மக்களை மீளவும் குடியமர்த்தியுள்ளமையானது வில்பத்துவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமையினை ஆராய,  குடியுரிமை அதிகார இயக்க அதிகாரி சமன் ரத்னப்ரிய, காமினி வியங்கோட ஆகியோரும் சுகாதார, துறைமுக, புகையிரத மற்றும் அரச ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்ட வில்பத்து சுற்றுப்பயணத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; வில்பத்துவில் காடழிப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட சில ஊடகங்களூடாக சூழலியலாளர்களும் தேரர்கள் சிலரும் தொடர்ந்தும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அவர்கள் ஒளிபரப்பும் அல்லது தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மை நிலையும் இல்லை என தெரிவித்த திலக் காரியவசம் அவர்கள், இதுவரை வில்பத்து தேசிய வனப்பூங்கா எவ்வித பாதிப்புக்களுக்கும் உள்ளாகியில்லை எனவும் தெரிவித்திருந்தார். தான் இப்பிரதேசத்திற்கு இந்திய இராணுவம் வந்த காலந்தொட்டு அடிக்கடி சமூகமளிப்பதாகவும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் முஸ்லிம்களை விரட்டிய பின்னர் மீளவும் அவர்கள் அங்கு வருகையில் வெறும் காடாகவே காணப்பட்டதாகவும் அதனை சுத்தம் செய்யும் போது வில்பத்து காடழிப்பு என குரல்கள் ஒழிப்பதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

(By : rahmath)