ரக்னா லங்கா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் அனுமதி

ரக்னா லங்கா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் அனுமதி

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் மூன்று வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய, குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் ஆயுத விற்பனையிலும் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.