மீள்நிர்ணயச் செயற்குழுவின் அறிக்கை வர்த்தமானியிடுவதில் தாமதமாகும் – பைசர் முஸ்தபா…

மீள்நிர்ணயச் செயற்குழுவின் அறிக்கை வர்த்தமானியிடுவதில் தாமதமாகும் – பைசர் முஸ்தபா…

மீள்நிர்ணயச் செயற்குழுவின் அறிக்கையை, இம்மாத இறுதிக்குள் வெளியிடுவது குறித்துத் தனக்குக் காணப்படும் விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, அறிக்கையில் காணப்படும் தவறுகளை, முடியுமான வரையில் விரைவாகத் திருத்தி, இறுதி அறிக்கையை விரைவில் அனுப்புமாறு கோரியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இச்செயற்குழுவின் அறிக்கை, அதன் தலைவர் அசோக பீரிஸால், ஜனவரி 12ஆம் திகதி, அமைச்சர் பைஸரிடம் கையளிக்கப்பட்டது.

அத்தோடு, அந்த அறிக்கையை மீளாய்வு செய்யவும் அதில் காணப்படும் தவறுகளைத் திருத்துவதற்கும், மேலுமொரு வாரத்தை, அதன் தலைவர் கோரியிருந்தார். தவறுகளைத் திருத்திக் கொண்டு, அதை வர்த்தமானியிடுவதற்கு, ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாகவும், தலைவர் அசோக பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அவ்வறிக்கையில், மேலும் பாரிய பிழைகளை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, தற்போது கண்டுபிடித்துள்ளதாகவும், அதன் காரணமாக அவ்வறிக்கை வர்த்தமானியிடுதல் தாமதித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.