கைப்பேசி நிறுவனத்திற்கு எதிராக  கிரிக்கெட் வீரர் தோனி, உயர்நீதிமன்றத்தில் மனு…

கைப்பேசி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி, உயர்நீதிமன்றத்தில் மனு…

ஒப்பந்த காலத்திற்கு பின்னரும் மேக்ஸ் கைப்பேசி நிறுவனம் தனது பெயரை சட்டவிரோதமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக கிரிக்கெட் வீரர் தோனி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

மேக்ஸ் மொபிளிக் என்ற நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் விளம்பர தூதரக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியை ஒப்பந்தம் செய்தது.

ஓராண்டு செல்லுபடியான இந்த ஒப்பந்தம் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.

அதன் பின்னரும் தனது பெயரை அந்நிறுவனம் பயன்படுத்துவதாக டெல்லி நீதிமன்றத்தில் தோனியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தோனியின் ஒப்பந்தம் டிசம்பர் 2012 ல் காலாவதியானதால், மேக்ஸ் நிறுவனம் தனது இணையதளம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்தும் தோனியின் பெயர் மற்றும் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேக்ஸ் நிறுவனம் அமுல்படுத்தவில்லை என்று கூறி அதன் தயாரிப்புகளை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று தோனி தரப்பில், அவரது வழக்கறிஞர் சஞ்சீவ் மனுத் தாக்கல் செய்துள்ளார்.