சீனாவின் நவீன ஏவுகணையால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல்…

சீனாவின் நவீன ஏவுகணையால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல்…

சீனாவின் புதிய அதிநவீன ஏவுகணையால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சீன ராணுவம் தயாரித்த 2 அதிநவீன DF-16 ரக ஏவுகணைகளும், அவற்றை செலுத்துவதற்கான ஏவு ஊர்திகளும் புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளையும் சீன ராணுவம் வெளியிட்டது.

கடந்த வாரம் 10 அணு குண்டுகள் ஏவக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியது. தற்போது மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அளவிலான நவீன ஏவுகணையுடன் போர்ப் பயிற்சி நடத்தியுள்ளது. இந்த போர் பயிற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

சமீப காலமாக தென்சீனக் கடல் எல்லையில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை சீன ராணுவம் சந்தித்து வருகிறது.

இந்த ரக ஏவுகணைகள் 1,000 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக சென்று துல்லியமாக இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணைகளால் சில டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் சுமந்து செல்ல முடியும்.

DF-16 ஏவுகணை தன்னிடம் இருப்பதாக சீனா 2015-ம் ஆண்டு முதன் முதலாக அறிவித்தது. அதன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வடிவம் தான் தற்போது பொதுமக்களிடம் வீடியோ காட்சியாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

சீனாவின் இந்த புதிய ரக ஏவுகணையால் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறதும் குறிப்பிடத்தக்கது…