லசந்த படுகொலை – இராணுவ புலனாய்வு உத்தியோகத்தருக்கு நட்ட ஈடு வழங்க  உச்ச நீதிமன்றம் உத்தரவு

லசந்த படுகொலை – இராணுவ புலனாய்வு உத்தியோகத்தருக்கு நட்ட ஈடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தருக்கு நட்ட ஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று(16) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயங்கரவாத தடைப் பிரிவினர் காரணம் எதுவுமின்றி தம்மை கைது செய்து ஓராண்டு காலம் வரையில் தடுத்து வைத்திருந்தனர் என இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் லான்ஸ் கோப்ரல் கந்தேகெதர பியன்சவினால் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார்.

பயங்கரவாத தடைப் பிரிவிற்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.பயங்கரவாதத் தடைப் பிரிவினர் கைது செய்து எவ்வித குற்றச்சாட்டையும் சுமத்தாது ஓராண்டு காலம் தடுத்து வைத்திருந்ததன் மூலம், குறித்த இராணுவ புலனாய்வு உத்தியோகத்தரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்காக ஒரு லட்சம் ரூபா கந்தேகெதர பியவன்சவிற்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம், பயங்கரவாதத் தடைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர் சிசிர டி ஆப்ரு தலைமையிலான மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழு இந்த மனுவை பரிசீலனை செய்துள்ளது.