சாம்சங் நிறுவனத்தின் தலைவரின் கைதினை தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பில் சரிவு…

சாம்சங் நிறுவனத்தின் தலைவரின் கைதினை தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பில் சரிவு…

உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ ஜே யோங் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 79 வருடமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன வரலாற்றில், முதல் முறையாக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர் லீ ஜே யோங் ஆவார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, சாம்சங் குழுமத்தில் உள்ள இரு நிறுவனங்களை இணைப்பதற்காக, தென்கொரிய ஜனாதிபதி பார்க் க்யூனுக்கும், அவரது நம்பிக்கையாளரான சோய் சூன்-சில் என்பவருக்கும் 37.74 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ ஜே யோங் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டினை சாம்சங் தலைவரும், தென்கொரிய ஜனாதிபதி பார்க்கும் மறுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்ட செய்தியால், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பில் 1.2 சதவிகிதம் சரிந்தது. அதே போன்று சாம்சங் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பில் 3.2 சதிவிகிதம் சரிந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.