படகு கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கிறது…

படகு கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கிறது…

களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்று(20) காலை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று(19) இரவு குறித்த தேடுதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், அவசரத் தேவைகளுக்காக அதிகாரிகள் தயாராக இருந்ததாகவும் கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேருவளை பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றுக்காக சென்ற படகுகளில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

நேற்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 11 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன்போது காப்பாற்றப்பட்ட 32 பேர் சிகிச்சைகளுக்காக பேருவளை, களுத்துறை மற்றும் நாகொடை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.