மெரீனாவில் போராட்ட அறிகுறி குறித்து 1,500 பொலிசார் குவிப்பு…

மெரீனாவில் போராட்ட அறிகுறி குறித்து 1,500 பொலிசார் குவிப்பு…

சென்னை மெரீனா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடக்க உள்ளதாக வெளியான தகவலையடுத்து, அங்கு சுமார் 1,500 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த சில நாள்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்களும், இளைஞர்களும் நடத்தப்போவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடற்கரையின் கலங்கரை விளக்கம் தொடங்கி நேப்பியர் பாலம் வரை வழக்கமான 500 பொலிஸாருடன் கூடுதலாக ஆயிரம் பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

மாறுவேடத்தில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல், பொலிஸ் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.