கண்டி, A-26 பிரதான வீதியைத் திறக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு…

கண்டி, A-26 பிரதான வீதியைத் திறக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு…

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள A-26 பிரதான வீதியைத் திறக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு, உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த மனுவை, கண்டியைச் சேர்ந்த இருவரே, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு, மே மாதம் 26ஆம் திகதியன்றே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மனுவில், பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபை, கண்டி நிறைவேற்று பொறியியலாளர், கண்டி மாநகர சபை, பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியினால், 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி, ஸ்ரீ தலதா மாளிகையின் முன்வாயிலில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், தலதா மாளிகையின் சுற்றுவட்டாரம் பெருமளவில் சேதமடைந்திருந்தது.

அதன்பின்னர், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வீதி, பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

(rizmira)