2 ஓட்டங்களுக்குப் போராடித் தோற்றது பங்காளி அணியினர்….

2 ஓட்டங்களுக்குப் போராடித் தோற்றது பங்காளி அணியினர்….

பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையில் நேற்று(22) இடம்பெற்ற 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கொழும்பில் இடம் பெற்ற குறித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 354 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்று தோல்வியினை தழுவியது.

(rizmira)