ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் சில மாற்றங்கள்- ரவி இனது இடம் பொனீ’க்கு…

ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் சில மாற்றங்கள்- ரவி இனது இடம் பொனீ’க்கு…

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட பதவிகளில் முக்கிய சில மாற்றங்களை அடுத்த வாரத்தில் ஏற்படுத்தப்படவுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறான ஒரு மாற்றம் கட்சியின் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதி, கூடவுள்ள ஐ.தே.க உயர்பீடக் கூட்டத்தில், கட்சியை எதிர்காலத் தலைமுறையினரிடம் ஒப்படைப்பதன் பிரதான நடவடிக்கையாக, பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

கட்சியின் பிரதித் தலைவர் பதவி நிலையானது 3ஆக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதில் ஒரு பதவி சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கட்சியின் உப-தலைவர் பதவியிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா’வுக்கு ஐ.தே.கட்சியின் உப- தலைவர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அக்கட்சியின் உப-தலைவராக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ள நிலையில் அந்தப் பதவியும் இரண்டாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், இன்னும் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்படும் என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

(rizmira)