வராலாறு காணாத மழையினால் ஆஸ்திரேலியா வெள்ளத்தி.. உயிர்களுக்கும் ஆபத்து…

வராலாறு காணாத மழையினால் ஆஸ்திரேலியா வெள்ளத்தி.. உயிர்களுக்கும் ஆபத்து…

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன

பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த ‘டெபி’ புயல் ஆஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது.

இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40cm மழை பெய்துள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 20cm மழை கொட்டி இருக்கிறது. இதனால் தெற்கு குயின்ஸ்லாந்து பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது.

இங்குள்ள பிரிஸ்பன் நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து அடியோடு பாதித்துள்ளது. மின்சார துண்டிப்பால் நகரம் இருளில் மூழ்கி உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலைமை மோசமாகி வருகிறது. சுமார் 2000 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மழை நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார்கள்.

 

(rizmira)