உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தோருக்கு நஷ்டஈடு..

உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தோருக்கு நஷ்டஈடு..

அண்மையில் இறக்காமம், வாங்காமம் கிராமத்தில் உணவு விஷமானதன் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 6 இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் 3குடும்பங்களில், ஒரு குடும்பத்துக்கு 2 வீடுகளும் ஏனைய 2 குடும்பங்களுக்கும் தலா ஒவ்வொரு வீடும் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.

இதற்கான மதிப்பீட்டு அறிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கைகளைத் துரிதமாகச் சமர்ப்பிக்குமாறும் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீருக்கு, அமைச்சர் பணித்துள்ளார்.

வாங்காமம் கிராமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த புதன்கிழமை(05) நடைபெற்ற கந்தூரி வைபவத்தையிட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த உணவை உட்கொண்டவர்களில் 3 உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,005 பேர் சுகவீனமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

(rizmira)