தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது..

தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது..

தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் பிற்பாடு கடந்த சில நாட்களாக தொடர்ந்த போராட்டத்தை தபால் ஊழியர்கள் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவுடன் நேற்று(29) மாலை நடந்த கலந்துரையாடலின் போது தமக்கு நியாயமான பதில் கிட்டியதாக தொற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தபால் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் தாக்கம் செலுத்தும் 6/2006 சுற்று நிரூபத்தின் பரிந்துரைக்கள் அதன்படியே முன்வைக்கப்படும் எனவும், அந்த விடயம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக காரியவசம் தெரிவித்தார்.

உத்தேச காலி –கோட்டை, கண்டி, நுவரெலியா தபால் நிலையங்கள் சுவீகரிக்கப்படும் விடயம் தொடர்பில் தொழிற்சங்க சம்மேளனங்களுடன் கலந்துரையாடி இருதரப்பு இணக்கப்பாட்டுடன் இறுதி தீர்வு எட்டப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)