முதற் கட்டமாக 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி…

முதற் கட்டமாக 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி…

உள்நாட்டு சந்தையில் அரிசி விநியோகத்தை தொடர்ந்தும் பேணும் நோக்கில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முதற் கட்டமாக மூன்று இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் வெளிநாட்டுத் தூதுவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தோனேஷியா, தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான விலை மனுவை அமைச்சர் கோரியுள்ளார்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகை பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது.

 

(rizmira)