ஹலால் சான்றிதழ் வழங்குவது குறித்து பொதுபலசேனா மீண்டும் சர்ச்சை..

ஹலால் சான்றிதழ் வழங்குவது குறித்து பொதுபலசேனா மீண்டும் சர்ச்சை..

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உலமா சபை கட்டணம் அறவிட்டு அப்பணத்தை தீவிரவாதிகளுக்கு வழங்கியதைப் போன்று தற்போது ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனமும் அறவிடும் ஹலால் சான்றிதழுக்கான கட்டண நிதி ஐ.எஸ்.

தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

அது தொடர்பாக அரசுஉடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என பொதுபலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடாக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே இத்தகவலை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;,

“.. சில நிறுவனங்கள் ஹலால் சான்றிதழுக்காக மில்லியன் கணக்கான ரூபாக்களை கட்டணமாக செலுத்தி வருகின்றன. இந்நாட்டில் வாழும் 10% ஆன முஸ்லிம்களுக்காக 90% அக வாழும் பெரும்பான்மை உட்பட ஏனைய சமூகங்களும் ஹலால் வரிக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

எனவே, குறித்த இந்த ஹலால் என்ற பெயரில் அறவிடப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது. வருடாந்தம் எவ்வளவு தொகை அறவிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் குழுவொன்றினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஹலால் நிதி அரசாங்கத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும்…” எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
(rizmira)