ஐக்கிய தேசியக்கட்சி துள்ளுவதை நிறுத்தட்டும் – கீதா

ஐக்கிய தேசியக்கட்சி துள்ளுவதை நிறுத்தட்டும் – கீதா

ஐக்கிய தேசியக் கட்சி அதிகம் துள்ளக் கூடாது என தென் மாகாணசபை உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று பெரிய சத்தம் போடுகின்றது. அவ்வளவு எடுத்தோம் இவ்வளவு எடுத்தோம் என மார் தட்டிக்கொள்கின்றது.

எனினும் அவர்களுக்கு நாற்பது லட்சம் வாக்குகளே உண்டு.

நாம் சொல்கின்றோம் 40 லட்ச வாக்குகளை வைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அமைதியாக இருக்க வேண்டும். அதிகம் ஆடக்கூடாது.

இந்த அரசாங்கம் கூட அவர்களுக்கு பாவத்திற்கே கிடைத்தது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த அரசாங்கம் முடிவடையும்.

19ம் திருத்தச் சட்டம் குறித்து ஆடிய ஐக்கிய தேசியக் கட்சி, 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆட்டமில்லை.

20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது நழுவிச் செல்லவே முயற்சித்தது. ஐக்கிய தேசியக் கட்சியினர், ஜனாதிபதி தேர்தலின் போது ஆயிரம் பொய் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள்.

இந்த பொய்யர்கள் மீண்டும் வாக்கு கேட்டு வரட்டும் என்றே மக்கள் காத்திருக்கின்றார்கள் என கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.