விவசாயிகள் சம்மேளனம் அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு

விவசாயிகள் சம்மேளனம் அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு

அநுராதபுரம், பொலநறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நெல் அறுவடைக்குத் தயாராகின்றன. அத்துடன், கவுதுல பிரதேசத்தில் 18 ஆயிரம் ஏக்கரிலும் பொலநறுவையில் ஒன்றரை லட்சம் ஏக்கரிலும் அறுவடை நடக்கவுள்ளது.
இந்த அறுவடைகள் முடிந்ததும் நாட்டில் கிட்டத்தட்ட 26 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பில் இருக்கும். இந்நிலையில், அரசு அரிசியை இறக்குமதி செய்தால் உள்நாட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். அத்துடன் அடுத்த வருட ஆரம்பம் வரை நம் நாட்டிற்கு  தேவைக்கான போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளது. அதனால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே கிடையாது என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.