நாளை ஆறு மணித்தியால நீர் வெட்டு

நாளை ஆறு மணித்தியால நீர் வெட்டு

திருத்த வேலை காரணமாக, கண்டியின் சில பகுதிகளில் நாளை ஆறு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாளை காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹாரிஸ்பத்து மற்றும் அகுரண பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கஹல்ல, கஹவத்தை, அகுரண, குருகோட, தேலம்புகஹவத்தை, ஹாரிஸ்பத்துவ, கோஹாகோட, நுகேவேல, பரிகம, ரஜபிஹில்ல, மெதவெல மற்றும் பிரஜாபிடிய ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

அதேபோல் கண்டி மாநகர சபைக்குட்பட்ட அஸ்கிரிய நீர் தாங்கியில் இருந்து நீரைப் பெற்றுக் கொள்ளும் பகுதிகள் மற்றும் பொல்கோல்ல நீர் சுத்திகரிப்பு நிலைத்தின் ஊடாக நீரைப் பெற்றுக் கொள்ளும் பலனகல, பங்கலாவத்தை, பிகில்லதெனிய, பட்டியதென்ன மற்றும் உயன்வத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.