ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 8400ல் இருந்து 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்துவருவதால் அங்கு அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து, அங்குள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா அதிகரித்துள்ளது. தற்போது ஆப்கானில் 11 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஜெனரல் கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இருந்த வீரர்கள் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் அவர் கூறினார்