ஆயிரக்கணக்கான பெண்களை அரை நிர்வாணமாக்கிய Playboy ஆரம்பகர்த்தா உலகை விட்டும் பிரிந்தார்…

ஆயிரக்கணக்கான பெண்களை அரை நிர்வாணமாக்கிய Playboy ஆரம்பகர்த்தா உலகை விட்டும் பிரிந்தார்…

உலகினையே திரும்பிப் பார்க்க வைத்த சஞ்சிகையான ப்ளே போய் (Playboy) சஞ்சிகையின் நிறுவனரான ஹியு ஹெப்னர் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91 என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிகாகோ நகரிலுள்ள இலினோய் பல்கலைக்கழகத்தில் மனோதத்துவம் குறித்து பட்டப் படிப்பு வாங்கிய ஹியு ஹெப்னர் (Hugh Hefner) குறித்த சஞ்சிகையினை ஆரம்பிக்க அவரிடமிருந்த அனைத்து பொருட்களையும் ஈடு வைத்து டொலர் 800 இனைப் பெற்றுள்ளார்.

பின்னர் அவரது தாயிடமிருந்து 1,000 டொலர்களையும் மற்றும் 45 நபர்களிடமிருந்து 8,000 டொலர்களையும் வாங்கியுள்ளார்.

பின்னர் 1953 ஒக்டோபர் மாதம் Playboy எனப்படும் சஞ்சிகையினை ஆரம்பித்ததோடு, முதல் சஞ்சிகையில் முதற்பக்க அட்டைப் புகைப்படத்தினை பிரபல ஹோலிவூட் நடிகை மெரிலின் மொன்றோகே அலங்கரித்திருந்தார்.

முதல் சஞ்சிகையின் பிரதிகள் ஒருவார காலத்தினுள் முற்றாக விற்பனையாகிய நிலையில், அதற்காக காரணம் குறித்த சஞ்சிகையில் அடங்கியுள்ள அரை நிர்வாண புகைப்படங்கள் என தெரியவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)