லங்கா ஈ நியூஸ் இணையதள ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..

லங்கா ஈ நியூஸ் இணையதள ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..

நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(28) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கோட்டை மாநகர சபையின் முன்னாள் உப தலைவர் மதுர விதானகேவினால் இது குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதில், லங்கா ஈ நியூஸ் இணையதளத்தில் வௌியான செய்தி ஒன்றால் நீதிமன்றம் மற்றும் பெரும்பாலான நீதிபதிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, பிரதிவாதியை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய விசாரணைகளின் போது, சந்தேகநபருக்கான நோட்டீஸை வௌிவிவகார அமைச்சு மற்றும் பிரித்தானிய, கனேடிய தூதரகங்களுக்கு ஊடாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், மனு மீதான விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

(rizmira)