பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தலாகாது – பெப்ரல்

பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தலாகாது – பெப்ரல்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது அரச சொத்துக்களையோ அல்லது வாகனங்களையோ முறைகேடாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து நேற்று தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தல்கள் ஆணையாளருக்குள்ள அதிகாரத்தினை முன்னிலைப்படுத்தி இக்கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை மீள பெற வேண்டும் எனவும் அவ்அமைப்பு மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(riz)