கொலம்பியாவில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு

கொலம்பியாவில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு

கொலம்பியாவில் இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் சதிச்செயல் என்று அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.

தலைநகர் போஹோடாவில் தனியாருக்கு சொந்தமான பென்சன் நிதி வழங்கும் இரண்டு கிளை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு நிறுவனத்திலும் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு திடீரென குண்டு வெடித்தது. இதில் அந்த கட்டிடத்தின் கண்ணாடிகள் மற்றும் சேதம் அடைந்த பகுதிகள் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது விழுந்தது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு குறித்து பாதுகாப்பு மந்திரி கூறும்போது ‘‘இது ஒரு தீவிரவாத தாக்குதல். ஆனால், வீரியம் குறைந்த வெடிகுண்டு என்பதால் அதிக அளவு பாதிப்பு இல்லை’’ என்றார்.

இந்நிலையில் பெரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அதிபர் ஜூயான் மானுவேல் சந்தோஷ் தனது தனது பயணத்தை இடையில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

(riz)