இன்று பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் விசேட கூட்டம்

இன்று பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் விசேட கூட்டம்

இன்று (7) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விஷேட சாந்தி போன்று கூடவுள்ளது. இக்குறித்த சந்திப்பானது, சிறிக்கொத்தவில் காலை 1௦ மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கட்சியின் முன்னாள் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரெரா தெரிவிக்கையில்; ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு தயாரிக்கும் பணிகள் 95 வீதம் பூர்த்தியாகியுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு மற்றும் வேட்பு மனு தயாரிக்கும் பணிகளில் 95 வீதமான பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேட்பு மனுகள் எதிர்வரும் 10ம் மற்றும் 13ம் திகதிகளில் தாக்கல் செய்யப்படும்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 16,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவர்களில் தூய்மையான திறமையான குழுவொன்றை தெரிந்து தேர்தலில் களமிறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேட்பு மனு தாக்கல் தயாரிக்கும் பணிகள் எதிர்வரும் இரண்டு தினங்களில் பூர்த்தியாகும் என காமினி ஜயவிக்ரம பெரேரா சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

(riz)