மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் தீவிபத்து – 15 பேர் பலி…

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் தீவிபத்து – 15 பேர் பலி…

மும்பையில் லோயர் பரேல் எனுமிடத்தில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள 6வது மாடியில் நள்ளிரவு 12.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் சிக்கி உடல் கருகி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து குறித்து மும்பை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது