சுகாதாரசேவைகளில் இரண்டு பிரிவு பணியாளர்களின் உத்தியோகபூர்வ சீருடையில் மாற்றம்…

சுகாதாரசேவைகளில் இரண்டு பிரிவு பணியாளர்களின் உத்தியோகபூர்வ சீருடையில் மாற்றம்…

சுகாதார சேவைகளில் குடும்ப சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் ஆகியோரின் உத்தியோகபூர்வ சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார். புதிய சீருடை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து யோசனைகளை வழங்குமாறு குறித்த சுகாதார சேவையாளர்களது தொழிற்சங்கங்களிடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.