தீவிரத் தீர்மானங்களை முன்னெடுக்கும் மஹிந்த தரப்பினர்

தீவிரத் தீர்மானங்களை முன்னெடுக்கும் மஹிந்த தரப்பினர்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனு தயாரிக்கும் போது மஹிந்தவுக்காக செயற்பட்டவர்களை நீக்கி விட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருங்கியவர்களின் பெயர்களை நிரப்புவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்ட மேல் மாகாணசபை முதலமைச்சர் கூட்டணி மற்றும் சுதந்திர கட்சியின் செயலாளர்களுக்கு பாரிய அளவிலான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆயத்தம் மஹிந்தவின் விளக்கில் மற்றவர்கள் வெளிச்சத்தை பார்ப்பதாக கூறியதோடு நியாயமான முறையில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் தீவிரமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தேவையான அனைத்து உதவிகளையும் பிரசன்ன ரணதுங்கவுக்கு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக குரல் கொடுத்தவர்களின் பெயர்கள் வெட்டப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானவர்கள் சேர்க்கப்பட்டு வருவதாக மேல் மாகாண முதலமச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர்களுக்கு பகிரங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

மஹிந்த விளக்கில் வேறு நபர்கள் வெளிச்சத்தை பார்க்கும் நடவடிக்கை இது என கூறியுள்ள பிரசன்ன ரணதுங்க.

வேட்பாளர் பட்டியல் நியாயமான முறையில் தயாரிக்கப்படாது போனால், கடும் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உடனடியான பதில் எதுவும் கிடைக்காவிட்டால், அபே ஸ்ரீலங்கா நிதாஸ் பெரமுன (எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி) என்ற கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தீர்மானித்துள்ளது.

(riz)