விம்பிள்டன் டென்னிஸ் – பெடரர், சிலிச் கால்இறுதிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் – பெடரர், சிலிச் கால்இறுதிக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் 2–ம் நிலை வீரரும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 4–வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த ரபெர்ட்டோவை எதிர்கொண்டார்.

இதில் பெடரர் 6–2, 6–2, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் 13–வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

9–ம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா) 6–4, 4–6, 6–3, 7–5 என்ற செட் கணக்கில் டெனிஸ்குட்லாவை (அமெரிக்கா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) கால்இறுதியில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். முதல் 2 செட்டை 6–7 (6–8), 6–7 (6–8) என்ற கணக்கில் ஜோகோவிச் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

3–வது மற்றும் 4–வது செட்டை அவர் 6–1, 6–4 என்ற கணக்கில் வென்றார். இருவரும் தலா 2 செட் கைப்பற்றிய நிலையில் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையால் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் தொடர்ந்து இன்று நடக்கிறது.

மற்ற ஆட்டங்களில் 3–ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), 4–ம் நிலை வீரரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆகியோர் வென்று கால்இறுதிக்கு நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் மோதும் வீராங்னைகள் விவரம்:–

  1. செரீனா வில்லியம்ஸஸ் (அமெரிக்கா)– அசரென்சகா (பெலாரஸ்).
  2. ஷரபோவா (ரஷியா)– கோகா (அமெரிக்கா).
  3. ரட்வன்ஸ்கா (போலந்து)– மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா).
  4. கார்பன் (ஸ்பெயின்)– டிமியா (சுவிட்சர்லாந்து).

(riz)