பாடசாலை அதிபரை முழங்காலிட வைத்த சம்பவம் குறித்து கல்வியமைச்சர் அறிக்கை கோருகிறார்..

பாடசாலை அதிபரை முழங்காலிட வைத்த சம்பவம் குறித்து கல்வியமைச்சர் அறிக்கை கோருகிறார்..

பதுளை, தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சர் முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில், மாகாண கல்வி அமைச்சின் பிரதானிகள் மற்றும் குறித்த அதிபரின் செயற்பாடுகள், முதலமைச்சர் கல்வி அதரிகாரிகளை அச்சுறுத்தியிருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராய்ச்சிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

குறித்த அதிபர் முதலில் இவ்வாறான சம்பவம் நடைபெறவில்லையென தெரிவித்திருந்த நிலையில், சில அரசியல் நடவடிக்கைகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே இது வரை நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையைக் கோருவது அவசியம் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

#rizma