அமெரிக்க ராணுவத்தில் சிக்கன நடவடிக்கைக்கு  40 ஆயிரமாக வீரர்கள் குறைப்பு

அமெரிக்க ராணுவத்தில் சிக்கன நடவடிக்கைக்கு 40 ஆயிரமாக வீரர்கள் குறைப்பு

அமெரிக்க இராணுவத்திற்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு பாராளுமன்றம் கூறியுள்ளது. இதனால் ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த 2 ஆண்டில் தரைப்படையில் 40 ஆயிரம் வீரர்களை குறைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தரைப்படையில் ஏராளமான சிவில் ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 17 ஆயிரம் பேரை குறைக்க முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்க தரைப்படையில் தற்போது 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். 2012–ம் ஆண்டு ஈராக்குடன் போர் நடந்தபோது 5 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் அமெரிக்க ராணுவத்தில் இருந்தனர். அது படிப்படியாக குறைக்கப்பட்டு 4 லட்சத்து 50 ஆயிரம் ஆனது. இப்போது மேலும் வீரர்களை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதேபோல கடற்படை, விமானப்படையிலும் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(riz)