தயிர் தேன் கலவையின் பயன்கள்…

தயிர் தேன் கலவையின் பயன்கள்…

தயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும்.

எந்தவித சருமத்தையும் அழகாக்கும் தன்மை தேனிடம் உண்டு.அதேபோல் தயிர் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும்.

இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்து உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை பார்க்கலாம்…

எப்படி முகத்தில் உபயோகிக்கலாம்?
1 ஸ்பூன் தேனை 2 ஸ்பூன் தயிருடன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். தொடர்ந்து இதனை செய்யும்போது உங்கள் வறண்ட, டல்லாகியிருக்கிற சருமத்தை, பளிச்சின்னு மாற வைக்கும் என்பது உறுதி.

சிறந்த மாய்ஸ்ரைஸர்:
தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வறண்ட சருமமாக இருந்தால், ஈரபதத்தை அளித்து மென்மையாக்குகிறது.

சிவப்பழகை தருவிக்கிறது:
மெலனின் நம் சருமம் கருமை அடைவதற்கு காரணமான ஹார்மோன் ஆகும். தயிரிலுள்ள டைரோசின் என்கின்ற அமினோ அமிலம் இந்த மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால் சிவப்பழகு கூடும். சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கும்.

அலர்ஜியை தடுக்கும்:
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் க்ரீம்கள் போடும்போது உண்டாகும் அலர்ஜியை இந்தக் கலவை போக்கும். இவ்விரண்டிலுமே ஜின் என்ற மினரல் உள்ளது. சருமத்தில் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்துகிறது.

முகப்பருக்கு:
உங்களுக்கு முகப்பரு தொல்லை தருகிறதா? அப்படியெனில் இதுதான் பெஸ்ட் சாய்ஸ். தயிரும் தேனும் சிறந்த கிருமி நாசினி. இவைகள் முகப்பருவை அண்ட விடாமல் தடுக்கின்றன.

கருவளையம்போக்குகிறது :
கண்களும் அதற்கு கீழ் உள்ள பகுதிகளும் மிகவும் சென்ஸிடிவானது. அங்கு எளிதில் சுருக்கங்கள் வந்துவிடும். கண் சுருக்கங்களை இந்த கலவை நாளடைவில் குறைத்து உங்களை அழகாக காட்டும்.

சுருக்கங்களை போக்கும் :
தயிர் மற்றும் தேன் சருமத்திற்கு இறுக்கத்தினை தருகிறது. கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் சுருக்கங்கள் மறையும். இளமையாக உங்கள் முகத்தினை காட்டும்.

வெயிலினால் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்க:
நிறைய பேருக்கு உண்டாகும் அலர்ஜி வேனிற்கட்டி, சிவந்து போய் தடிதடியாய் முகம் கழுத்து கை என வெயில் படும் இடத்திலெல்லாம் ஆகிவிடும். இந்த கலவையை தொடர்ந்து உபயோகித்தால், சரும பிரச்சனைகளிலிருந்து விடுதலை காணலாம்.