தொற்றா நோய் தொடர்பிலான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்…

தொற்றா நோய் தொடர்பிலான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்…

தொற்றா நோய் தொடர்பான சார்க் பிராந்திய நாடுகளை உள்ளடக்கிய விசேட சர்வதேச மாநாடு இன்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ள இந்த சர்வதேச மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும். சார்க் பிராந்திய நாடுகளில் தொற்றாநோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பரிமாறிக் கொள்வதும் இந்த மாநாட்டின் மற்றுமொரு நோக்கமாகும்.

மார்படைப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட பல நோய்கள் தொற்றா நோய்களாக கருதப்படுகின்றன. 2025ஆம் ஆண்டில் தொற்றா நோய் தாக்கத்தை 25 வீதம் வரை குறைப்பதில் விசேட கருத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சார்க் பிராந்திய நாடுகளில் தொற்றாநோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பரிமாறிக் கொள்வதும் இந்த மாநாட்டின் மற்றுமொரு நோக்கமாகும்.