ஓராண்டுத் தடைக்குப் பின்னும் அவுஸ்திரேலிய அணியில் விளையாட மாட்டேன்.. – வார்னர்…

ஓராண்டுத் தடைக்குப் பின்னும் அவுஸ்திரேலிய அணியில் விளையாட மாட்டேன்.. – வார்னர்…

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் மீண்டும் அணியில் விளையாட மாட்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இன்று(31) சிட்னியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது போது கண்ணீர் மல்க தனது செயலுக்கு வருத்தப்பட்டார். அது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. அவுஸ்திரேலியாவை மோசமான முறையில் கீழே விழ வைத்துவிட்டேன். ஒருநாள் உங்களிடம் மீண்டும் நம்பிக்கையையும், மதிப்பையையும் பெறுவேன் என நம்புகிறேன். எனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மன்னிக்க முடியாத தவறை செய்து விட்டேன். நான் மீண்டும் அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஆனால் அவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் ஒரு போதும் நடக்காது என்பதை உறுதி அளிக்கிறேன்.

நான் இராஜினாமா செய்கிறேன். அவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட மாட்டேன். நான் நேசித்த எனது அணியுடன் ஆடப் போவதில்லை என்பதை நினைத்தால் இதயம் வலிக்கிறது.

தென்னாபிரிக்காவில் நடந்ததற்கு நான் தான் முழுக் காரணம். அது மன்னிக்க முடியாத குற்றம். எனக்கான மன்னிப்பை பெற நீண்ட காலம் ஆகும். எனது அணியினர் தென்னாபிரிக்காவில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் இங்கு இருப்பது மனதுக்கு வலியை ஏற்படுத்தியது. அவுஸ்திரேலிய மக்களிடம் எனது குடும்பத்தினருடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்…” என வோர்னர் தெரிவித்துள்ளார்.