கடலுக்கடியில் பயங்கர வெப்பம் – நாஸா

கடலுக்கடியில் பயங்கர வெப்பம் – நாஸா

கடலுக்கு அடியில் இருக்கும் வெப்பம் குறித்து நாசா சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு அடியில் கூடுதல் வெப்பம் மறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

குறிப்பாக பசிபிக் கடலுக்கு அடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிகப் பயங்கரமான வெப்பம் மறைந்திருக்கிறது என்றும் இந்த வெப்பத்தின் அளவானது முன்பு நினைத்ததை விட அதிகமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள்  கூறுகிறார்கள்.

இவ்வெப்பநிலை மேலே வரும் போது பூமியின் வெப்பநிலை மாறும் என்றும் வெப்பத்தையும், உலகளாவிய பூமி வெப்பமயதாதலையும், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வீசும் சக்தி வாய்ந்த காற்று தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

(riz)