சூரியவெவில் இடம்பெற்ற முறுகல் நிலைத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு…

சூரியவெவில் இடம்பெற்ற முறுகல் நிலைத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு…

பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில், சூரியவெவில் இடம்பெற்ற முறுகல் நிலைத் தொடர்பில் அறிக்கைச் சமர்ப்பிக்குமாறு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரதி அமைச்சர் நலின் பண்டா ஜெயமஹா, விசேட அதிரடிப்படையினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

சூரியவெவ அண்டரவெவவில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக, விசேட அதிரடிப்படையினர் சென்ற போது, அவ்விடத்துக்கு விரைந்த பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும விசேட அதிரடிப்படையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளாரெனத் தெரிய வருகிறது.

இதனையடுத்து அவ்விடத்தில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலேயே, சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரதி அமைச்சர் நலின் பண்டா ஜெயமஹா, அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசேட அதிரடிப்படையினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், தான் அறிந்துகொண்டதாகவும் எனினும் அறிக்கை சமர்பிக்கும்வரை எந்தக் கருத்துகளையும் கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.