தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…

தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…

சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தமைக்கு தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேநீர் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அல்லது உணவுப்பக்கற்றொன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அசேல சம்பத் கூறியுள்ளார்.

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 138 ரூபாவால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.