மீண்டும் புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா- அமெரிக்கா குற்றச்சாட்டு…

மீண்டும் புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா- அமெரிக்கா குற்றச்சாட்டு…

எச்சரிக்கையும் மீறி வடகொரியா புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கட்டமைக்கும் பணியில் வட கொரியா ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் பியாங் யாங் அருகேயுள்ள சனும்டாஸ் என்ற இடத்தில் அவை தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடகொரிய தொழிற்சாலைகள் தொடர்ந்து அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்க உள்துறை மந்திரி மைக்பெம்போ குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, வட கொரியாவின் அணுவாயுதக் களைவில் இணைந்து பணியாற்றுவதாக இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியிருந்தனர்.

அதேநேரம், வட கொரியாவிடமிருந்து நீண்ட நாட்களிற்கு அணுவாயுத எச்சரிக்கை வராது எனவும் ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.