கோப் அறிக்கையின்படி மஹிந்த நிதி மோசடிக் குற்றவாளி

கோப் அறிக்கையின்படி மஹிந்த நிதி மோசடிக் குற்றவாளி

மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட இலங்கை வங்கியின் பணம் கடனாக வழங்கப்பட்டமை சம்பந்தமான விடயத்தில் குற்றவாளி என பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இரண்டு நிறுவனங்கள் மற்றும் இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை வங்கியிடம் இருந்து பெற்ற 627 கோடி ரூபா கடனை மீள் செலுத்தவில்லை.

அத்துடன் 19 ஆயிரத்து 375 கோடி ரூபாவை கடனாக பெற்றதுடன் அதனை செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதியாக அன்றைய நிதியமைச்சரின் பரிந்துரையின் படியே இந்த பணம் கடனாக வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை திரும்ப பெற நிதியமைச்சர் என்ற வகையில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.

(riz)