பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதிக்கு…

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதிக்கு…

உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று (31) வழங்கப்படுகின்றது.

நேபாளின் காத்மண்டு நகரில் நடைபெற்றுவரும் பிம்ஸ்டெக் அரச தலைவர்களது மாநாடு, இன்று(31) நிறைவுபெறவுள்ள நிலையிலேயே, அதன் தலைமைத்துவம், ஜனாதிபதிக்கு வழங்கப்படவிருக்கின்றது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, மியன்மார், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.