ஓரினச்சேர்க்கை என்பது குற்றமல்ல – உச்ச நீதிமன்றம்…

ஓரினச்சேர்க்கை என்பது குற்றமல்ல – உச்ச நீதிமன்றம்…

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு 377-ஐ இரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று(06) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 377ன்படி, இயற்கைக்கு மாறாக ஆண்களோ, பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் வழக்குகள் அனைத்தும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்கள் கடந்த ஜூலை 17 ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று(06) தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் கருத்து தெரிவித்தனர். அத்துடன், ஓரினச்சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ இரத்து செய்து உத்தரவிட்டனர்.