உள்நாட்டு தெங்கு உற்பத்தி அதிகரிப்பு – 294 கோடி தேங்காய் அறுவடை எதிர்பார்ப்பு..

உள்நாட்டு தெங்கு உற்பத்தி அதிகரிப்பு – 294 கோடி தேங்காய் அறுவடை எதிர்பார்ப்பு..

உள்நாட்டு தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், இவ்வருடம் 294 கோடி தேங்காய் அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் தெங்கு செய்கை சபையின் தலைவர் கபில யகந்தலாவ தெரிவித்துள்ளார்.

வெளி இடங்களில் ஒரு தேங்காயின் விலை 50 ரூபா வரை வீழ்ச்சி கண்டுள்ளதோடு, கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் தேங்காயின் சில்லறை விலை உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. ஒரு தேங்காயின் மொத்த விலையை 45 ரூபாவினால் பேண நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அது தெங்குச் செய்கையாளர்களுக்கு சாதகமாக அமையும்.

இதேவேளை, தேங்காய் எண்ணெய்க்கான கிராக்கியும் அதிகரித்துள்ளது. தேங்காய் எண்ணெய் பாவனை மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கேள்விக்கு ஏற்ற வகையிலான தேங்காய் எண்ணெய் விநியோகம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக குறித்த சபை மேலும் அறிவித்துள்ளது.