நாய் மற்றும் பூனை கறிகளுக்கு தடை…

நாய் மற்றும் பூனை கறிகளுக்கு தடை…

அமெரிக்காவில் நாய்கள் மற்றும் பூனைகள் கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்டம் அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் அவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நாய் மற்றும் பூனைகள் மனிதர்களிடம் நண்பர்களாக பழகுகின்றதுடன், அவை செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்கப்படுகின்றன.

ஆனால் ஆண்டுதோறும் சீனாவில் 1 கோடிக்கும் மேற்பட்ட நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன.அதேபோன்று பல்லேறு நாடுகளில் பூனைகளும் இறைச்சிக்காக கொல்லப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் நாய்கள் மற்றும் பூனைகள் கறிக்கு (இறைச்சிக்கு) தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாய் மற்றும் பூனை கறி தடை சட்டம் 2018 என பெயரிடப்பட்டுள்ளது. மீறி அவற்றை கொன்று கறி விற்பனை செய்தால் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர நாய் மற்றும் பூனை கறி விற்பனைக்கு தடை விதிக்கும்படி சீனா, தென் கொரியா, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வலியுறுத்தி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே செல்ல பிராணிகளின் பாதுகாப்பு சட்டங்களுக்கு விலங்குகள் நல அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.